ஆப்டேட் ஆகுமா வயர்லெஸ் பிரிவு மன உளைச்சலில் போலீசார்
ஆப்டேட் ஆகுமா வயர்லெஸ் பிரிவு மன உளைச்சலில் போலீசார்
ADDED : ஏப் 12, 2026 05:54 AM
புதுச்சேரி போலீஸ் துறையின் தகவல் தொடர்புகள், கோரிமேட்டில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் வெயர்லெஸ் பிரிவில் இருந்து ஆப்ரேட் செய்யப்படுகிறது. போலீஸ் துறையின் ரகசிய தகவல்கள், வி.வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் வயர்லெஸ் பிரிவே கவனிக்கிறது.
இங்கு, சுமார் 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக கிடக்கிறது. கோரிமேடு வயர்லெஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மூவர், அரசியல் பிரமுகர்களின் சிபாரிசு மூலம் புதுச்சேரிக்கு வராமல் காரைக்காலிலே பணியாற்றி வருகின்றனர்.
இது தவிர, 5 போலீசார் டூயிங் டுயூட்டி என்ற பெயரில், வயர்லெஸ் பிரிவில் வேலை செய்வதுபோல் காண்பித்து வேறு இடத்தில் பணியாற்றி வருகின்றனர். அதிக பணிச்சுமை காரணமாக அங்கு பணியில் இருந்த 2 காவலர்கள் கடந்த சில மாதம் முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். இதுதவிர, வயர்லெஸ் பிரிவில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் ஆதி காலத்தில் வாங்கப்பட்டவை. இயந்திரங்களில் இணைக்கப்பட்ட ஒயர்களும் பழுதடைந்து கிடக்கிறது.
இதனால் சரியான சிக்னல் கிடைக்காமல் மக்கர் செய்கிறது. நவீன காலத்திற்கு ஏற்ப வயர்லெஸ் பிரிவை அப்டேப் செய்வதுடன், புதிய இயந்திரங்கள், ஆப்டிகல் பைபர் இணைப்பு, புதிய வாக்கி டாக்கிகள் வாங்க போலீஸ் துறை முன் வர வேண்டும். இதனை அனைத்தும் மேற்கொள்ள வயர்லெஸ் பிரிவுக்கு என தனி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும்.
