ADDED : செப் 14, 2026 06:11 PM
புதுச்சேரி: காட்டேரிக்குப்பம்– சுத்துக்கேணி செல்லும் சாலைக்கும், அருகிலுள்ள ஊசுட்டேரி நீர்வரத்து வாய்க்காலுக்கும் இடையே தடுப்புப் வேலி அமைக்கப்படாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
காட்டேரிக்குப்பம்– சுத்துக்கேணி செல்லும் சாலை வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், திருவக்கரை பகுதியில் இருந்து ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் புதுச்சேரி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய சாலையாக திகழ்கிறது.
இந்நிலையில், இச்சாலையை ஓட்டி சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்து ஊசுடேரிக்கு செல்லும் 25 அடி ஆழ நீர்வரத்து வாய்க்கால் அமைந்துள்ளது. ஆனால், இந்த வாய்க்கால்க்கும்– சாலைக்கும் இடையே இதுவரையில் எந்தவித தடுப்பு வேலியும் அமைக்கப்படவில்லை.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீர்வரத்து வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, காட்டேரிக்குப்பம்– சுத்துக்கேணி செல்லும் சாலையோரத்தில் தடுப்பு வேலி அமைக்க அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
