/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தி.மு.க., இல்லையென்றால் காங்., இருக்காது' சபாநாயகர் செல்வம் பேச்சு

ADDED : மார் 18, 2025 04:22 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சட்டசபை அலுவல் குழுவில் காங்., எம்.எல்.ஏ.,வை சேர்க்காதது குறித்த எழுப்பிய வாதம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நேரு எம்.எல்.ஏ., பேசுகையில், 'ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
அசோக்பாபு: ஓடாத வண்டியில் ஏற வேண்டாம். தமிழ்நாட்டில் காங்., தனியாக நின்று பாருங்கள்.
வைத்தியநாதன்: புதுச்சேரியில் பா.ஜ., தனியாக நிற்க முடியுமா. அப்போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து பேசியதால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
சபாநாயகர் செல்வம்: நீங்க எங்கிருந்து சென்றீர்கள். தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க., கட்சி இல்லையென்றால், காங்., கட்சியே இருக்காது.
அசோக்பாபு: டில்லியில் காங்., 62 தொகுதிகளில் டிபாசிட் கூட வாங்கவில்லை.
வைத்தியநாதன்: நீங்கள் எல்லாரையும் விலைக்கு வாங்குகிறீர்கள். மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் பா.ஜ., செய்த வேலை எல்லாருக்கும் தெரியும்.
சபாநாயகர் செல்வம் குறுக்கிட்டு வைத்தியநாதனை அமர வைத்து விவாதத்தை முடித்து வைத்தார்.