தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஸ்சில் உதவுவது போல் நடித்து மூதாட்டியிடம் திருடிய பெண் கைது

 பஸ்சில் உதவுவது போல் நடித்து மூதாட்டியிடம் திருடிய பெண் கைது

 பஸ்சில் உதவுவது போல் நடித்து மூதாட்டியிடம் திருடிய பெண் கைது


ADDED : மார் 06, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி மார்ச் 6-: பஸ்சில் இறங்க உதவி செய்வது போல் நடித்து, மூதாட்டியின் பர்ஸைத் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தினர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுமதி, 72. இவர், நேற்று முன்தினம் மதியம் தனது மகள் உஷாவைப் பார்ப்பதற்காக நெய்வேலியில் இருந்து பஸ் மூலம் புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தார். கடலுாரில் இருந்து புதுச்சேரி பஸ்சில் ஏறிய போது, 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுமதியிடம் சகஜமாக பேசிக் கொண்டு வந்தார்.

தான் மதுரையைச் சேர்ந்த 'கங்கா' என, அறிமுகப்படுத்திக் கொண்ட அப் பெண், பச்சை மற்றும் வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தார். பஸ் முதலியார்பேட்டை, மரப்பாலம் நிறுத்தத்திற்கு வந்தபோது, சுமதியின் பைகளைத் துாக்கி கொடுத்து கீழே இறங்க உதவி செய்தார்.

சுமதி பஸ்சை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் தனது பையை சோதித்தபோது, அதிலிருந்த மணிபர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் ரூ. 3,000 ரொக்கம், ஆதார் கார்டு, ஓட்டு அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் மருந்து மாத்திரைகள் இருந்தன.

சுமதி அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று புதுச்சேரி பஸ் நிலையத்தில் மூதாட்டி கூறிய அடையாளத்துடன், அதே நிற ஆடையில் சந்தேகப்படும்படி இருந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவர் மதுரை வண்டியூரை சேர்ந்த கங்கா என்பதும், அவர் மூதாட்டியிடம் பர்சை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us