ADDED : டிச 05, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெண்ணிடம் 2 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் வினோதினி. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர், குறைந்த அளவில் பணத்தை முதலீடு செய்தார். அதற்கான லாபம் வந்தது. அந்த ஆசையில், அவர் மர்ம நபரின் வாட்ஸ் அப் குருப்பில் இணைந்து, 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.அதனை அடுத்து, அவரால், முதலீடு செய்தற்கான லாப பணத்தை எடுக்க முடியாமல் போனது.மர்ம நபர்களை தொடர்பு கொண்ட போது, மேலும், பணம் தர வேண்டும் என கூறினர். அதன்பின் அவருக்கு மோசடி கும்பல் என தெரியவந்தது.
வினோதினி கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.