/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை
/
பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 24, 2025 10:06 PM
புதுச்சேரி; முதலியார்பேட்டையில், பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, திருமகள் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 46. இவர் முதலியார்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில் சேர்ந்து, 2 சீட்டுகள் கட்டி வந்தார். அதற்காக, அவர், மாதந்தோறும் தலா 20 ஆயிரம் வீதம் செலுத்தினார். ஏலச்சீட்டு முடித்த பிறகும், புவனேஸ்வரிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விஜயகுமார் கொடுக்கவில்லை.
அதே போல், புவனேஸ்வரி நடத்திய 10 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில் 4 வது சீட்டை எடுத்த விஜயகுமார், அதன்பின் எடுத்த சீட்டிற்கான பணத்தை செலுத்தாமல் இருந்து வந்தார். இதற்கிடையே புவனேஸ்வரியிடம் ஓட்டல் திறக்க உள்ளதாக கூறி கடனாகவும் பணம் பெற்றுள்ளார்.
இதுபோன்று, புவனேஸ்வரிக்கு மொத்தமாக 22 லட்சத்து 3580 ரூபாய் விஜயகுமார் கொடுக்க வேண்டும். அதில், 98 ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 21 லட்சத்து 5,580 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் விஜயகுமார் திடீரென வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் விஜயகுமார் மீது மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.