தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணிடம் ரூ.42 லட்சம் மோசடி

 பெண்ணிடம் ரூ.42 லட்சம் மோசடி

 பெண்ணிடம் ரூ.42 லட்சம் மோசடி


ADDED : மார் 10, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பெண்ணிடம் ரூ. 42 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி நைனார்மண்டபம் சுதானா நகர் பகுதியை சேர்ந்தவர் கற்பகம் 45, இவர் மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கணிதம் பாடம் வகுப்பு எடுத்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு இவரது தோழி சாந்தி என்பவர் மூலம் கரியமாணிக்கம் கல்யாண மண்டபம் வீதியைச் சேர்ந்த செல்வமுருகன் 48, என்பவர் அறிமுகமாகியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு, குழந்தைகளின் படிப்பிற்காக செல்வமுருகன் கற்பகத்திடம் வீட்டு சொத்து பத்திரம், கொடுத்து ரூ.31 லட்சம் பணம் வாங்கியுள்ளார். மேலும் சீட்டு பணம் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு கட்டாமல் விட்டுள்ளார். இது தொடர்பாக கற்பகம் பணம் கேட்டபோது, எனது சொத்து பத்திரத்தை கொடுத்தால் அதனை விற்று பணம் தருவதாக செல்வமுருகன் கூறியுள்ளார்.

அதனை நம்பிய கற்பகம் சொத்து பத்திரத்தை செல்வமுருகனிடம் கொடுத்தார். ஆனால் செல்வமுருகன் பணம் தரமால் காலம் தாழ்த்திவந்தார். நேற்று முன்தினம் கற்பகம் செல்வமுருகனின் வீட்டிற்கு நேரில் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது செல்வமுருகன் பணத்தை திருப்பி தராமல், கற்பகத்தை ஆபாசமாக திட்டி பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கற்பகம் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் செல்வமுருகன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us