ADDED : ஜன 15, 2026 07:53 AM
புதுச்சேரி: பெண்ணிடம் ரூ. 25 ஆயிரம் ஏமாற்றிய மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்த பெண்ணை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு பேசினார். அதில், குறைந்த வட்டியில் ரூ. 3 லட்சம் வரை லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.
இதைநம்பி, லோன் பெற விண்ணப்பித்தபோது, இன்ஸ்சூரன்ஸ் கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, மர்மநபருக்கு ரூ. 25 ஆயிரம் செலுத்தினார். அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், கோரிமேட்டை சேர்ந்தவர் 23 ஆயிரம், தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் 24 ஆயிரத்து 900, திருபுவனையை சேர்ந்தவர் 10 ஆயிரம் என, 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ.82 ஆயிரத்து 900 ரூபாய் இழந்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
