/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிநாட்டு பார்சல் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.5.80 லட்சம் மோசடி
/
வெளிநாட்டு பார்சல் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.5.80 லட்சம் மோசடி
வெளிநாட்டு பார்சல் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.5.80 லட்சம் மோசடி
வெளிநாட்டு பார்சல் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.5.80 லட்சம் மோசடி
ADDED : ஜன 15, 2025 12:25 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 12 பேர் 11 லட்சத்து 51 ஆயரம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி திலாஸ்பேட்டையை சேர்ந்த மேரி ஜூலி. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், சென்னை ஏர்போர்ட் சுங்கவரி அதிகாரி பேசுவதாக கூறி, தங்களுடைய பேரில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் டாலர் மதிப்பிலான பார்சல் வந்துள்ளது.
அந்த பார்சலை பெறுவதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பிய மேரி ஜூலி ரூ.5.80 லட்சத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.
வில்லியனுார் பரசுராமபுரம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மங்கலட்சுமி. இவர் இணையதளத்தில் வந்த துணி விளம்பரத்தை பார்த்து,1 லட்சத்து 23 ஆயிரத்து 686க்கு பணம் செலுத்தி துணிகளை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், ஆர்டர் செய்த துணி வராததால், அவர் பணம் அனுப்பிய இணையதள முகவரியை ஆய்வு செய்தபோது, போலி என்பது தெரிய வந்தது.
மூலக்குளத்தை சேர்ந்த ஆனந்தராயலு என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், குறைந்த வட்டியில் ரூ.1.5 லட்சம் கடன் தருவதாக கூறியுள்ளார். இதைநம்பி லோன் பெற விண்ணப்பித்து செயலாக்க கட்ட ணமாக 36 ஆயிரத்து 917 செலுத்தி ஏமாந்துள்ளார்.
இதேபோன்று முத்திரையர்பாளையத்தை சேர்ந்த அறிவரசன் 2 லட்சத்து 21 ஆயிரம், புதுச்சேரி பாரதிதாசன் நகர் அருண்குமார் 25 ஆயிரத்து 78, ரெட்டியார்பாளையம் அருண்பிரசாத் 25 ஆயிரம், தவளக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் 18 ஆயிரத்து 558, பாக்கியராஜ் 14 ஆயிரம், புதுச்சேரி அஸ்வதி 90 ஆயிரம், காரைக்கால் கோட்டுசேரி மணிகண்டன் 10 ஆயிரம், கருவடிக்குப்பம் ராமலிங்கம் 1050, சாமிபிள்ளை தோட்டம் ஸ்ரீதரன் 6 ஆயிரம் என மொத்தம் 12 பேர் மோசடி கும்பலிடம் 11 லட்சத்து 51 ஆயிரத்து 289 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.