தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏலச் சீட்டில் நஷ்டம் பெண் தற்கொலை

ஏலச் சீட்டில் நஷ்டம் பெண் தற்கொலை

ஏலச் சீட்டில் நஷ்டம் பெண் தற்கொலை


ADDED : ஜூலை 01, 2025 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2025 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலுார் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோகர் மனைவி சுமதி 56; இவர் நடத்தி வந்த ஏலச் சீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுமதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கிருமாம்பாக்கம் அடுத்த மனப்பட்டு கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். இதனிடையே, சிலர் சுமதியிடம் ஏலச்சீட்டு பணத்தை கேட்டு வந்துள்ளனர்.

இதனால், மனம் உடைந்த சுமதி நேற்று முன்தினம் காலை அறைக்குள் நைலான் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த, கிருமாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மகன் சுகன் கொடுத்த புகாரில் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us