ADDED : ஜூலை 21, 2025 04:58 AM
காரைக்கால் : காரைக்காலில் கடன் பிரச்னையால் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் நெடுங்காடு பஞ்சாட்சாரபுரம் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேலு, 62; இவரது மனைவி சுதா, 45; இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். குமரவேலு பால் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன்பு குமரவேலு வீடுகட்டுவதற்காக வங்கி யில் கடன் வாங்கியும், மனைவி சுதா சுயஉதவி குழுவில் கடன் வாங்கியும் வீட்டை கட்டியுள்ளனர்.சரியான வருவாய் இல்லாததால் வங்கிக் கடன் மற்றும் சுயஉதவிக்குழு கடனை அடைக்க முடியவில்லை.
கடன் நெருக்கடியால் மனமுடைந்த சுதா கடந்த 17ம் தேதி வீட்டில் பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். உடன் உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருந்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதா நேற்று அதிகாலை இறந்தார்.
புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.