நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரியூரில் தனியார் பஸ் மோதி பெண் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் கீழ்பாதி 4 வது தெருவைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 55. இவர் நேற்று முன்தினம் மாலை அரியூரில் பழம் வாங்கி கொண்டு, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி வந்த தனியார் பஸ் (பி.ஒய்.01. பி.எஸ். 7967) எல்லம்மாள் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலியே இறந்தார். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.