ADDED : ஏப் 25, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கிய விழுந்த பெண் இறந்தார்.
தவளக்குப்பம் அடுத்த மாதா கோவில், வீதியை சேர்ந்தவர் சகாயராஜ் மனைவி திவ்யா பிரியா, 34; இவர், வீட்டில் ஆரி ஒர்க் செய்து வந்தார். நேற்று அதிகாலை திவ்யா பிரியாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது கணவர், அவரை உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
