/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கம்பியில் விழுந்து பெண் உயிரிழப்பு
/
மின் கம்பியில் விழுந்து பெண் உயிரிழப்பு
ADDED : அக் 31, 2025 02:15 AM

புதுச்சேரி:  முதலியார்பேட்டையில், மாடியில் இருந்து மின் கம்பியில், விழுந்த பெண் உயிரிழந்த, சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்; டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி, சூரியா, 29; இவர், தனது 5வயது மகன், இரண்டு வயது பெண் குழந்தையுடன், தீபாவளிக்காக, நுாறடி சாலை, ஜெயம் நகரில் உள்ள தனது சகோதரி பிரித்தி வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.
நேற்று, பிரித்தி வீட்டில் இருந்த வெளியே சென்றிருந்தார். மதியம் 12:30 மணியளவில், வீட்டு மாடிக்கு சென்ற சூரியா, திடீரென மின் கம்பியில், விழுந்து, அலறல் சத்தம் கேட்டது. வீட்டில், சமைத்து கொண்டிருந்த, அப்பெண்ணின் தாய், பதறிக்கொண்டு, அருகில் இருந்தவர்களை அழைத்து, காப்பாற்றுமாறு கூறினார்.
உடனடியாக, அங்கிருந்தவர்கள் மின் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, மின்சாரம் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, மின் கம்பியில் தொங்கிய, பெண்ணை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து,
முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தில், இறந்த பெண், கடந்த 4 ஆண்டுகளாக மனநல பாதிப்புக்கு, சிகிச்சை பெற்று வந்ததும், வீட்டு மாடியில் இருந்து எட்டி பார்க்கும் போது, கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

