ADDED : அக் 07, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்; தனியார் மனநல காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உடல் நலகுறைவால் இறந்தார்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை, காக்கையாந்தோப்பில், தனியார் மனநல காப்பகம் உள்ளது. 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில், அங்கு தங்கியிருந்த லட்சுமி, 40; என்பவருக்கு கடந்த 4ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மனநல காப்பகத்தின் ஊழியர்கள் அரசு மருத்துவமனையில், சேர்த்தனர்.
சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.