/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
/
வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 28, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் வங்கி கிளையில், காத்திருந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால், பரபரப்பு நிலவியது.
பாகூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில், கணக்கை ரத்து செய்து தரக்கோரி நீண்ட நேரம் காத்திருந்த குருவிநத்தம் கிராமத்தை பெண் ஒருவர் நேற்று மதியம் 2:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார்.
உடன் வந்தவர்கள் அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகள் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.