/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகை, பணம் திருடிய பெண் சிறையில் அடைப்பு
/
நகை, பணம் திருடிய பெண் சிறையில் அடைப்பு
ADDED : ஜன 01, 2024 05:50 AM
பாகூர் : பாகூர் அருகே நகை பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 52; புதுச்சேரி கடற்கரையில், நகராட்சிக்கு சொந்தமான பொது கட்டண கழிப்பிடத்தில் வேலை செய்கிறார். அப்போது, அங்கு வந்து செல்லும் திண்டிவனம் ஜக்காம்பேட்டையை சேர்ந்த வளர்மதி 34; என்ற பெண்ணுடன் ராஜேஸ்வரிக்கு நட்பு ஏற்பட்டது.
கடந்த நவ., 11ம் தேதி, ராஜேஸ்வரியிடம், வளர்மதி தனது தாய் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கு தங்க இடம் இல்லாததால், உங்கள் வீட்டில் ஒரு நாள் தங்கிக் கொள்கிறேன் என, கேட்டுள்ளார்.இதனால், ராஜேஸ்வரி, வளர்மதியை வீட்டிற்கு அழைத்து சென்று தங்க வைத்தார். மறுநாள் காலை இருவரும் புதுச்சேரி சென்றனர்.பின், ராஜேஸ்வரி வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 3 சவரன் நகைகள், வெள்ளி பொருட்களை காணவில்லை.
ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, வளர்மதியை பிடித்து விசாரித்தனர். ராஜேஸ்வரி வீட்டில் திருடிய 3 சவரன் நகை, 60 கிராம் வெள்ளி பொருட்கள், 1,700 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வளர்மதியை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.