தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்கூட்டரில் எடுத்து சென்ற நாட்டுவெடி வெடித்து பெண் பலி

 ஸ்கூட்டரில் எடுத்து சென்ற நாட்டுவெடி வெடித்து பெண் பலி

 ஸ்கூட்டரில் எடுத்து சென்ற நாட்டுவெடி வெடித்து பெண் பலி


ADDED : ஜன 12, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: காட்டுப்பன்றி வேட்டைக்கு, ஸ்கூட்டரில் எடுத்து சென்ற நாட்டுவெடி வெடித்ததில், நரிக்குறவ பெண் பலியானார்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனுாரை சேர்ந்தவர் பாண்டியன், 43; நரிக்குறவர். இவர், தன் மாமியார் ஜெரீனா, 51; உடன் காட்டுப்பன்றியை வேட்டையாட, நாட்டுவெடி குண்டுகளை எடுத்து சென்றார்.

பன்றியை வேட்டையாடி, அதை துண்டு துண்டாக வெட்டி, ஒயர் கூடையில் வைத்து, மீதமுள்ள வெடி குண்டுகளை ஸ்கூட்டர் சீட்டிற்கு அடியில் வைத்து, இருவரும் வில்லியனுார் நோக்கி வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, கூடப்பாக்கம் அருகே நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சாலையில் உள்ள வேக தடையில் ஏறி இறங்கிய ஸ்கூட்டர், கீழே விழுந்தது. அதில் இருந்த நாட்டுவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.

இதில், ஜெரீனா உடல் சிதறி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பாண்டியனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வில்லியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us