நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார் அருகே ரயில் மோதி பெண் இறந்தார்.
வில்லியனுார், மெயின் ரோடு அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்; மூலகுளத்தில் சலுான் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சந்திரா, 58. இவர், நேற்று வி.மணவெளி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரயில் தண்டவளத்தை கடக்க முயன்ற போது காலை 10:30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பயணிகள் ரயில், அவர் மீது மோதியது.
இதில் சந்திரா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

