நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஊனமுற்ற மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அரும்பார்த்தபுரம் பேட்டைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 35; பிறவிலியே இடது கை, கால் ஊனமுடையவர். இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த கலைச்செல்வி, கடந்த 9ம் தேதி மாலை மளிகை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது தந்தை வாசுதேவன் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.