ADDED : டிச 06, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குட்கா பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் அந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். போதை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து கடை உரிமையாளர் கருணாகரன் மனைவி பவானி, 40, என்பவரை கைது செய்தனர். கடையில் வியாபாரத்திற்கு வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.