/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்கள் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை திறப்பு
/
பெண்கள் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை திறப்பு
ADDED : பிப் 17, 2026 05:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் பெண்கள் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை திறப்பு விழா வைசியால் வீதி- ஆம்பூர் சாலை சந்திப்பில் நடந்தது.
கிளை தலைவர் சண்முகப்பிரியா தலைமை தாங்கினார். செயலாளர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். பொருளாளர் குணாவதி வரவேற்றார்.
சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சீனுவாசன், துணைத் தலைவர் மது, ஆட்டோ சங்க மாநிலச் செயலாளர் விஜயகுமார் புதுச்சேரியில் முதல் முறையாக பெண்கள் ஆட்டோ ஸ்டாண்ட் கிளையை திறந்து வைத்தனர்.
இதில், ஆட்டோ சங்க தலைவர் மணவாளன், பொருளாளர் துளசிங்கம், மதிவாணன், கிளை துணைத் தலைவர் வேல்விழி, துணைச் செயலாளர் சத்யா, உறுப்பினர்கள் தேவி ராணி, பிரபாவதி, ஜெயந்தி, கார்த்திகா, மாலா, பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

