தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்டில் மகளிர் தின விழா

அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்டில் மகளிர் தின விழா

அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்டில் மகளிர் தின விழா


ADDED : மார் 05, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் மகளிர் தின விழா போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

உழவர்கரை தொகுதி, அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில், உழவர்கரை தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் போட்டி விழா முத்துபிள்ளைபாளையத்தில் நடந்தது.

இதில் மகளிர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில், அருண் சர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் பிரபாதேவி வீரராகு கலந்து கொண்டு, பிரஷர் குக்கர், ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பிச்சைவீரன்பேட் பகுதியில் நடந்த மகளிர் தின பரிசளிப்பு விழாவில், அருண் சர்மா தொண்டு நிறுவனர் வீரராகு, நிர்வாக இயக்குனர் பிரபா தேவி வீரராகு கலந்துகொண்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்துப்பிள்ளை பாளையத்தை சேர்ந்த செல்வம், பாஸ்கர், தாமோதரன், ஆனந்த், பூவரசன், சதீஸ், ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us