ADDED : மார் 08, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார்.
பள்ளி பெண் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு தலைமை ஆசிரியர் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆண் ஆசிரியர்கள், பெண் ஆசிரியைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

