தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் மகளிர் தின விழா

 மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் மகளிர் தின விழா

 மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் மகளிர் தின விழா


ADDED : மார் 13, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஷமிமுனிசா பேகம், பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளி உதவி பேராசிரியர் லட்சுமி தத்தை, புதுச்சேரி சி.ஐ.ஐ - இந்தியன் விமன் நெட்வொர்க் முன்னாள் தலைவி கவிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச்செயலாளர் வேலாயுதம், கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் உறுப்பினர்கள் கீதா தனசேகரன், கவிதா சுகுமாரன், டாக்டர் வைஷ்ணவி ராஜராஜன் கலந்து கொண்டு, மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அகடெமிக் டீன் அன்புமலர் வரவேற்றார். மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

பயோமெடிக்கல் பொறியியல் துறை தலைவி விஜயலக்ஷ்மிநன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us