ADDED : மார் 12, 2024 11:59 PM

பாகூர் : தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பள்ளி தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, பா.ஜ., மகளிர் அணி மாநில பொருளாளர் ஹேமமாலினி, வழக்கறிஞர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியைகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவது மாணவர்களா? மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதனை, பள்ளி சேர்மன் டாக்டர் கிரண்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கலைமாமணி நெய்தல் நாடன் நடுவராக இருந்தார்.
மாணவர்களே என்ற அணியில், பூஜா, பவித்ரா, புவனேஷ் ஆகியோரும், மாணவிகளே என்ற தலைப்பில், வேல்விழி, குருச்சந்திரா, காயத்ரி ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் அய்யாசாமி சிறப்புரையாற்றினர்.
ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர்கள் சிவா, ராஜப்பிரியன், சுகந்தி செய்திருந்தனர்.
மாநில அளவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் விமல்ராஜ், தினேஷ்பாபு, கார்முகிலன் ஆகியோர் செய்திருந்தனர்.
