/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ்ச்சங்கத்தில் மகளிர் நாள் விழா
/
தமிழ்ச்சங்கத்தில் மகளிர் நாள் விழா
ADDED : மார் 31, 2025 07:43 AM

புதுச்சேரி; புதுச்சேரி தமிழ்ச் சங்கம் சார்பில் மகளிர் நாள் விழா, சங்கத் தலைவர் முத்து தலைமையில் நடந்தது.
விழாவிற்கு, செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலர் தினகரன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் செல்வமுத்துமாரி சிறப்புரை ஆற்றினார்.
விழாவையொட்டி, முனைவர் ரேகா ராஜா, மரிஸ்டெல்லா வரில், ஜெயலட்சுமி, மலர்வாணி, வள்ளி ஆகியோருக்கு சிறந்த மகளிர்களுக்கான விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் இளமதி ஜானகிராமன் தலைமையில் 'வீழ்வேனென்று நினைத்தாயோ' தலைப்பில் பாவரங்கம் நடந்தது.
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சுரேசுகுமார், சிவேந்திரன், ஆனந்தராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு ராஜா நன்றி கூறினார்.