/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா கல்லுாரியில் பெண்கள் தின விழா
/
விவேகானந்தா கல்லுாரியில் பெண்கள் தின விழா
ADDED : பிப் 13, 2026 06:03 AM

புதுச்சேரி: செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக கல்வித் துறை முதுகலை பயிற்சி மாணவர்கள் இணைந்து சர்வதேச பெண்கள் தின விழாவை நடத்தினர்.
கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு தலைமை தாங்கி பேசுகையில், 'உலகளவில் அறிவியல் துறையில் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. தற்போது 30 சதவீதம் பெண்கள் மட்டுமே அறிவியல் துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமிகள் அறிவியல் துறையில் ஆர்வம் கொள்ளும் வகையில் கல்விச் சூழலை உருவாக்குவது வருங்கால ஆசிரியர்களின் முக்கியப் பொறுப்பாகும்' என்றார்
விழாவில், விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

