/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டையில் மகளிர் தின விழா
/
முதலியார்பேட்டையில் மகளிர் தின விழா
ADDED : ஏப் 12, 2025 07:23 AM

புதுச்சேரி; முதலியார்பேட்டை அ.தி.மு.க., சார்பில், மகளிர் தின விழா, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமையில் நடந்தது.
முதலியார்பேட்டை நுாறடி சாலை, சன்வே ஓட்டலில் நடந்த மகளிர் தின விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பேசுகையில், 'கடந்த நான்கு ஆண்டுகளாக முதலியார்பேட்டை தொகுதியில், பல்வேறு அரசியல் பணியை செய்து வருகிறேன்.
தற்போது மகளிர் தின விழாவின் மூலம், தேர்தல் அரசியல் பயணத்தை தீவிரமாக தொடங்க உள்ளேன். தொகுதி பிரச்னைகளை தீர்க்க குரல் கொடுப்பேன்.
கடந்த காலங்களில் ஒரு எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுத்த நீங்கள் எதற்காக அந்த தவறை செய்தோம் என்றும் மக்கள் நினைப்பதாகவும், மீண்டும் அப்படி ஒரு தவறு நடக்காமல் தொகுதி மக்கள் நல்லவர்களை மட்டுமே இனி தேர்ந்தெடுக்க வேண்டும்' என்றார்.
விழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட மகளிர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

