/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்
/
மகளிர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 24, 2025 06:03 AM

வில்லியனுார் : வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில்,மகளிர் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், 42 கிராம பஞ்சாயத்துகளில் மகளிர் கூட்டமைப்பு உள்ளது.இதில், ஆயிரத்து 500சுய உதவி குழுக்களில்,20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் செயற்பட்டு வருகிறது.
வில்லியனுாரில் நடந்த கூட்டமைப்பின் ஆண்டு பொது குழு கூட்டத்திற்கு திட்ட இயக்குனர் இஷிதா இராட்டி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் லட்சுமிதேவி வரவேற்றார்.வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்த் டென்டுல்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
எதிர்காலத் திட்டம் குறித்து கூட்டமைப்பு செயலாளர் ஷமிலாதேவி,2024 - 25 ஆண்டுக்கான வரவு செலவு தணிக்கையை கூட்டமைப்பு பொருளாளர் கயல்விழி ஆகியோர் வசித்தனர்.வாழ்வாதார இயக்கம்ஷோபனா,சாவித்திரி மற்றும் பவானி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
செயற்குழு உறுப்பினர் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, கிராம சேவாக் கூட்டமைப்பு ஊழியர்கள், பஞ்சாயத்து பொறுப்பாளர்கள், சமூக வல்லுநர்கள் உள்ளிட்ட 600 க்கு மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டனர்