ADDED : நவ 26, 2024 06:42 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஐ.டி.ஐ., மாணவிகளுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பட்டங்களை வழங்கினார்.
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம் அரசு மகளிர் ஐ.டி.ஐ., நிறுவனத்தில் 2023ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது.
இதில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ., முதல்வர் வசுந்தரா, சண்முகம், விஜயா, சக்திவேல், மணிமாறன், நோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
