தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,500 ஆக உயர்வு

 புதுச்சேரியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,500 ஆக உயர்வு

 புதுச்சேரியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,500 ஆக உயர்வு


ADDED : ஜன 08, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மகளிர் உரிமை தொகை, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு மாதமே உள்ள நிலையில், புதுச்சேரி அரசு, மக்கள் நல திட்டங்களை வேகப்படுத்தி வருகிறது. அதன்படி, சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்துள்ள, 65,000 பெண்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

இத்தொகை, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, மார்ச் மாதம் சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இத்திட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன், கடந்த 5ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், வில்லியனுாரில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும், 1,000 ரூபாய் உரிமை தொகை, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். உயர்த்தப்பட்டுள்ள உரிமைத் தொகை, வரும் 12ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு வழங்கப்படும்.

மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்களுக்கும், உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவி தொகையும் விரைவில் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகை எந்தளவுக்கு தர முடியுமோ அந்தளவிற்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us