ADDED : செப் 30, 2026 04:56 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், உள்ள மரங்களில் கம்பளிப் பூச்சிகள் அதிக அளவில் படர்ந்துள்ளது.
இதனால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர். கம்பளிப் பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததால், நேற்று 17 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்தனர்.
தகவலறிந்த, நாராயணசாமி எம்.எல்.ஏ., உடனடியாக நடவடிக்கை எடுக்க உழவர்கரை நகராட்சிக்கு உத்தரவிட்டார்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு வழிகாட்டுதல்படி, நகராட்சி இளநிலைப் பொறியாளர் சிவகுமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று நேற்று காலை ட்ரோன் மூலம் மரங்களின் உச்சி வரை பூச்சி மருந்து தெளித்து கம்பளி பூச்சிகளை அழித்தனர்.
