/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைப்பந்து மைதானம் அமைக்கும் பணி துவக்கம்
/
கைப்பந்து மைதானம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மே 19, 2025 06:24 AM

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி சண்முகாபுரத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கைப்பந்து விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
இப்பணிகளை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ரமேஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலர் சுந்தரேசன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம், செயற்பொறியாளர் கெஜலட்சுமி, உதவி பொறியாளர் விக்டோரியா, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை துணை இயக்குநர் வைத்தியநாதன், கேலோ இந்தியா திட்டத்தின் பொறுப்பாளர் ஆனந்தன், இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.