/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைப்பந்து மைதானம் அமைக்கும் பணி துவக்கம்
/
கைப்பந்து மைதானம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : நவ 11, 2025 06:40 AM

திருக்கனுார்: வாதானுாரில் கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி வாதானுாரில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.15.88 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.
இப்பணியை, அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அப்போது, , பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், தமிழ்மணி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் இணை இயக்குநர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, மணலிப்பட்டில் ரூ.20 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியையும், கே.ஆர்.பாளையத்தில் அமைக்கப்பட்ட புதிய போர்வெல்லை மக்கள் பயன்பாட்டிற்குஅமைச்சர் துவக்கி வைத்தார்.

