/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோணாங்குப்பம் ஆற்றில் துார் வாரும் பணி துவக்கம்
/
நோணாங்குப்பம் ஆற்றில் துார் வாரும் பணி துவக்கம்
ADDED : ஆக 21, 2025 11:45 PM

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் ஆற்றில் 47.67 லட்சம் ரூபாய் மதிப்பில் துார் வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது.
கடலுார் சாலை, நோணாங்குப்பம் படகு குழாமிற்கு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு வார விடுமுறை நாட்களில்குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர். ஆற்றில் மணல் மேடுகள் ஏற்பட்டு,படகுகள் தரை தட்டி சேதமடைகின்றன.
இந்நிலையில், நோணாங்குப்பம் படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச் முகத்துவாரம் வரை, துார் வரும் பணிக்கு பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், 47.67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணியை நோணாங்குப்பத்தில் அதிகாரிகள் நேற்று முன்தினம் துவக்கினர்.
நோணாங்குப்பம் படகு குழாம் அருகே, துார் வாரும் இயந்திரம் (டிரஜ்ஜர் ) மூலம், துார் வாரும் பணி நேற்று துவக்கப்பட்டது.இந்த பணி முடிந்த பிறகு சுற்றுலாவை மேம்படுத்த, சுற்றுலாத்துறை மூலம் கூடுதலாக படகுகள் இயக்கப்பட உள்ளன. மேலும், இந்த பணி வரும் 4 மாதத்திற்குள் முடிக்கப்படும் என, பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்தார்.