தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் பெருமாள் கோவிலில் தங்கத்தேர் செய்யும் பணி துவக்கம்

 வில்லியனுார் பெருமாள் கோவிலில் தங்கத்தேர் செய்யும் பணி துவக்கம்

 வில்லியனுார் பெருமாள் கோவிலில் தங்கத்தேர் செய்யும் பணி துவக்கம்


ADDED : மார் 15, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் தொழிலக உரிமையாளரிடம் டிரஸ்டி நிர்வாகிகள் வழங்கினர்.

வில்லியனுாரில் பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ரங்கராஜன் சாரிட்டபிள் டிரஸ்டி சார்பில், தங்கத் தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 15 அடி உயரம்; 7 அடி அகலத்தில் மரத்தால் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது.

அதனை தொடர்ந்து மரத்தேரில் வாட்டுமானம், நகாஸ் வேலைகள் செப்பு தகடில் செய்வதற்கு கும்பகோணத்தை சேர்ந்த 'ராஜா சில்பாலயா தொழிலகம்' சார்பில், ரூ. 27 லட்சம் திட்ட மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நேற்று தங்கத்தேர் பணிகள் துவங்க முதற்கட்டமாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தொழிலக உரிமையாளர் ராஜகோபாலிடம், டிரஸ்டி கவுரவ தலைவர் ஏகாம்பரம், மேனேஜிங் டிரஸ்டி ஹரிஹரிநமோநாராயணா, நிர்வாகிகள் பிரேம்குமார், கண்ணபிரான், ராமதாஸ், மோகனசுந்தரம், ஜெயமூர்த்தி ஆகியோர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பெருமாள், முருகையன், ரமேஷ், வேலவன், விமல்ராஜ் மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us