தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.சி.ஆரில் சென்டர் மீடியன் உயரமாக அமைக்கும் பணி

 இ.சி.ஆரில் சென்டர் மீடியன் உயரமாக அமைக்கும் பணி

 இ.சி.ஆரில் சென்டர் மீடியன் உயரமாக அமைக்கும் பணி


ADDED : ஏப் 13, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 04:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியால் கனகசெட்டிக்குளம் - பிள்ளைச்சாவடி இ.சி.ஆரில் சென்டர் மீடியன் உயரமாக கட்டும் பணி துவங்கியது.

புதுச்சேரி இ.சி.ஆரில் கனகசெட்டிக்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை, இ.சி.ஆர்., சாலையின் நடுவே விபத்தை தடுக்கும் வகையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சென்டர் மீடியன் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தத நிலையில், வாகனங்கள் குறுக்கே புகுந்து செல்வதால் இ.சி.ஆரில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சென்டர் மீடியின் இடைவெளி பகுதியில் கான்கிரீட் கட்டை கட்டப்பட்டிருந்தது.

இதனிடையே புதிதாக போடப்பட்ட சாலையின் உயரம் அதிகமானதால், சென்டர் மீடியனின் உயரம் குறைந்தது.

இதனால், வாகன ஓட்டிகளுக்கு சென்டர் மீடியன் இருப்பது சரியாக தெரியாத நிலை ஏற்பட்டது. இ.சி.ஆர்., சென்டர் மீடியனின் மீண்டும் விபத்து அபாயம் ஏற்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறை மூலம் கனகசெட்டிக்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை சென்டர் மீடியனை உயர்த்தி அமைக்கும் பணி நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது.

இதனை அப்பகுதி மக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us