ADDED : அக் 16, 2024 07:12 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : புதுச்சேரி, அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் கோபி, 43; சுமை துாக்கும் தொழிலாளி. அதிகமாக மது குடிக்கும் பழக்கமுடைய இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
