தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு


UPDATED : ஜூலை 09, 2026 06:34 PM

ADDED : ஜூலை 09, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 06:34 PM ADDED : ஜூலை 09, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த சென்ட்ரிங் தொழிலாளி உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 38; சென்ட்ரிங் தொழிலாளி. இவர் முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார்.

இந்நிலையில், தவளக்குப்பம் அடுத்த அலுத்துவேலி பகுதியில் நேற்று முன்தினம் மதில் சுவருக்கு கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, உணவு இடைவெளி நேரத்தில் அருகில் இருந்த மா மரத்தில் ஏறி மாங்காய் பறித்த போது, திடீரென மரக்கிளை முறிந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து, அவரது மனைவி சந்தியா கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us