தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


ADDED : அக் 13, 2024 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2024 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : மின் ஒயரை எடுத்த போது மின்சாரம் தாக்கி ராஜஸ்தான் மாநில தொழிலாளி உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பல்வீர்சிங், 30. இவர், தவளக்குப்பத்தில் தங்கி, மேஸ்திரி ஒருவர் மூலம் கடலுார் சாலையில் உள்ள தனியார் மகாலில் கிரானைட் பதிக்கும் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்த போது, கட்டிங் மிஷனில் இருந்த மின் ஒயரை கையால் எடுத்தார்.

அப்போது, மின்சாரம் தாக்கி, துாக்கி எறியப்பட்டார். காயமடைந்த, அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us