ADDED : அக் 12, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலுார் அடுத்த வான்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரமணி 62; கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி கரையாம்புத்துார் அரசு பள்ளியில் பணிபுரிகிறார்.
வீரமணி கடந்த 4ம் தேதி மாலை தனது மனைவி சாந்தியை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக தனது ஆக்டிவா பைக்கில் வந்து கொண்டிருந்தார். மணமேடு மேம்பாலம் அருகே திடீரென மயக்கம் ஏற்பட்டு வீரமணி நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார்.
ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை சிகிச்சை பலன்றி இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.