நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: மனைவி இறந்ததால், மனமுடைந்த கூலி தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம், 63; கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால், தனிமையில் இருந்து வந்த மாணிக்கம், மனமுடைந்து நேற்று முன்தினம் வீட்டின் மாட்டு கொட்டகையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

