நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்த சேலியமேடு பேட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகமுத்து, 68; இவர் இளைய மகன் செல்லப்பன் வீட்டில் வசித்து வந்தார். நாகமுத்துவிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அவர், அவ்வப்போது அவரது மகனிடம் பணம் கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நாகமுத்து, தனது மகனிடம் பணம் கேட்டுள்ளார். அவர், பணம் தர மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த அவர் மகன் கட்டிவரும் வீட்டின் அருகே உள்ள மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.