/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர் காப்பீட்டு கழகம் அம்னஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல்
/
தொழிலாளர் காப்பீட்டு கழகம் அம்னஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல்
தொழிலாளர் காப்பீட்டு கழகம் அம்னஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல்
தொழிலாளர் காப்பீட்டு கழகம் அம்னஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல்
ADDED : டிச 06, 2025 05:03 AM
புதுச்சேரி: தொழிலாளர் காப்பீட்டுக் கழகம், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க அம்னஸ்டி (2025) என்ற திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
மண்டல இயக்குனர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் 196வது கார்ப்பரேஷன் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இக்கூட்டத்தில், அம்னஸ்டி (2025) திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதில், பங்குதாரர்களுடன் நல்லுறவை வளர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கவும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தில், குற்றவியல் வழக்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 226வது பிரிவின் கீழ், தொடரப்பட்ட நீதிமன்ற வழக்குகள் திரும்ப பெறும் வாய்ப்பை வழங்குகிறது. இத்திட்டம் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.