நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கூலித்தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இருசப்பன் (எ) கனகராஜ், 42; கூலித்தொழிலாளி. கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.