ADDED : நவ 26, 2024 05:59 AM
புதுச்சேரி: தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பான, புதுச்சேரி மற்றும் காரைக்காலில், நாளை 27ம் தேதி முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, வருங்கால வைப்புநிதி ஆணையர் விக்னேஷ்வரன் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி, திருபுவனையில் உள்ள சம்வர்த்தன மதர்சவ் இன்னோவேடிவ் சொல்யூஷன்ஸ், காரைக்கால், கோட்டுச்சேரி விநாயக மிஷன் மருத்துவக் கல்லுாரியில், நாளை (27ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 5.45 மணி வரை முகாம் நடக்கிறது.
அதில், முதலாளிகள், தொழிலாளிகள் கடமைகள் மற்றும் தொழிலாளிகளுக்கு ஆன்லைன் சேவைகள் பற்றி விளக்குதல், உறுப்பினர்கள், ஓய்வூதியும் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், புதிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பாக விளக்கும் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

