/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர் வைப்பு நிதி முகாம் மழையினால் ரத்து
/
தொழிலாளர் வைப்பு நிதி முகாம் மழையினால் ரத்து
ADDED : நவ 27, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பாக நடக்க இருந்த முகாம், கனமழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வருங்கால வைப்புநிதி ஆணையர் விக்னேஷ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, திருபுவனையில் உள்ள சம்வர்த்தன மதர்சவ் இன்னோவேடிவ் சொல்யூஷன்ஸ், காரைக்கால், கோட்டுச்சேரி விநாயகா மிஷன் மருத்துவக் கல்லுாரியில், தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பான, முகாம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை வானிலை மையம், இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என ரெட் அலார்ட் அறிவித்துள்ளது. அதையடுத்து, முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

