/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரியில் பயிலரங்கு
/
இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரியில் பயிலரங்கு
ADDED : ஜன 10, 2024 01:50 AM

புதுச்சேரி : மாநில காசநோய் மையம், காசநோய் பணிக் குழு மற்றும் இந்திரா காந்தி மருந்துவக் கல்லுாரி சமூக மருத்துவத்துறை இணைந்து மாநில அளவிலான பயிலரங்கை நடத்தின.
புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த இரண்டு நாள் பயிலரங்கை சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு துவக்கி வைத்தார்.
இந்திராகாந்தி மருத் துவக் கல்லுாரி இயக்குனர் உதய சங்கர், டாக்டர்கள் சஞ்சய் சூர்யவன்ஷி, வெங்கடேஷ், கவிதா உட்பட மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பயிலரங்கில், காசநோய்க்கான சிகிச்சை, காசநோய்களை தடுப்பது மற்றும் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

