/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எழுத்தாளர்களுக்கு ஏப்., 11ல் பயிற்சி பட்டறை
/
எழுத்தாளர்களுக்கு ஏப்., 11ல் பயிற்சி பட்டறை
ADDED : மார் 28, 2025 05:20 AM
புதுச்சேரி; புதுச்சேரியில் வரும் ஏப்., 11ம் தேதி எழுத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடக்கிறது.
புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம் சிறப்பு பணி அதிகாரி வாசுகிராஜாராம் செய்திக்குறிப்பு;
சிறுகதை, கவிதை ஆகியவற்றில் ஆர்வமுடைய துவக்கநிலை எழுத்தாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், வரும் ஏப்., 11ம் தேதி எழுத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறையை புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இப்பயிற்சி பட்டறை லாஸ்பேட்டை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடக்கிறது.
இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் 93609 62442 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களின் துறை தலைவர்கள் மூலம் பெறப்பட்ட அனுமதி கடிதத்துடன் பங்கேற்க வேண்டும். பங்குபெறுபவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.